About Me

WHEN I EXAMINE MYSELF AND MY METHODS OF THOUGHT,
I COME TO THE CONCLUSION THAT THE GIFT OF FANTASY
HAS MEANT MORE TO ME THAN ANY TALENT FOR ABSTRACT

இயற்பெயர்: இரா. சண்முகநாதன்

தந்தை: ப.ராமச்சந்திரன்

தாயார் பெயர்: இரா. சுப்புலட்சுமி

அடியேன் நன்செய் நிலம் சூழ்ந்த நாஞ்சில் நாடு என்ற கன்னி பகவதி அன்னையின் அருள் நிறைந்த பரசுராமர் கால் பதித்த புண்ணிய பூமியாம் குமரி மாவட்டத்தின் தலை நகரமான நாகர்கள் அருள் நிறைந்த நாகர்கோவில் நகரத்தில் 1982ம் ஆண்டு ஐப்பசிமாதம் பூரம் நட்சத்திரத்தில் நல்லதோர் தாய் தந்தையர்க்கு இரண்டாவது மகனாக பிறந்தேன்.

சிறுவயது முதலே தந்தையின் மெய்ஞான உபதேசங்களையும் ஜோதிட சிற்றறிவுகளையும் பெற்று வாழும் வாய்ப்பு கிடைத்தது. அடியேனின் தந்தையார் அவர்கள் தன் பதினைந்தாம் வயதிலேயே ஜோதிடத்தின் அடிப்படைகளை கற்கும் பாக்கியம் பெற்றவர் என்பதாலும் சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க வழியில் தீட்சை பெற்றதாலும் அவ்வழியிலேயே அடியேனையும் வழி நடத்தி வருகிறார்.

காலமாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு கர்ம பலன்களின் காரணமாக 19ம் வயதில் தீவிர ஆன்மீக தேடலும் விபத்து காரணமாகவும் சில ஆண்டுகளாக படுக்கையில் காலம் கழிக்க நேர்ந்தது. அப்படி படுக்கையில் கழிந்த காலங்களில் தான் ஜோதிடம், எண் ஜோதிடம், டாரட் கலைகளை படித்தாயும் வாய்ப்பும் கிடைத்தது 2008 ஆம் ஆண்டு என் உடன் பிறந்த அண்ணன் பகவதி ராஜன் அவர்கள் சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்கள் எழுதி வெளிவந்த நாடி ஜோதிட விளக்கங்கள் மற்றும் சப்தரிஷி ஜோதிடம் என்ற இரண்டு புத்தகங்களையும் அடியேனுக்கு வாங்கி தந்து ஜோதிடத்தின் சூட்சுமங்களை அடியேன் தெரிந்துகொள்ள நல்வழி காட்டினார்.

மரியாதைக்குரிய தாய்மாமன் திரு சிதம்பரம் ஜோதிடர் அவர்கள் ஜோதிடத்தை தொழிலாக செய்வதற்கு அறிவியலுக்கு குருவருளும் தொழில் பொருள் வசதிகளும் செய்து ஊக்குவித்ததால் அடியேனும் தற்காலம் தொழில் முறை ஜோதிடர் ஆக இந்த உலகில் நடைபழகி வருகிறேன்.

அடியேனின் குரு சித்த யோகி சிவதாசன் ரவி

🏆🤝🏆